Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்

Author
By Author

This content has been archived. It may no longer be relevant

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள்

2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வானது, ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படும் 4GB RAM + 64GB நினைவகத்தைக் கொண்ட Y6p  ஸ்மார்ட்போன்,  தொழில்சார் தேவைகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தேவைக்கான புத்தம் புதிய டெப்லட், உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தும், வியாபாரம் சார்ந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் Huawei மடிக்கணினிகள் இரண்டு ஆகியவற்றின் அறிமுகத்தையும் உள்ளடக்கியிருக்கும்.

மேலும் இந்த அறிமுகத்தின் போது, Huawei  பாவனையாளர்கள் Huawei P40 Pro, Huawei nova 7i, Huawei Band 4மற்றும் நிகழ்வில் அறிமுகப்படுத்தபடவுள்ள புதிய தயாரிப்புகள் உள்ளடங்கலாக பல பரிசுகளை வெல்லவுள்ளனர். இந்த ஒன்லைன் நிகழ்வின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களுடன் கருத்து தெரிவிக்கும் 8 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் இந்த பரிசுகளை தட்டிச் செல்லவுள்ளனர்.

‘’இது நம்மில் பலருக்கு புதிய அனுபவமாக இருக்குமென்பதால், இந்த மாபெரும் ஒன்லைன் நிகழ்வுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.  இது Huawei மற்றொரு கவர்ச்சியான நிகழ்வாக இருக்குமென்பதுடன், அங்கு நாங்கள் ஐந்து புதிய Huawei சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றோம்.  இந்த வரவிருக்கும் சாதனங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதோடு, பாவனையாளர்களுக்கு கட்டுப்படியாகும் சந்தை விலையில் சிறந்த செயற்திறனை வழங்கும். இந்த மாபெரும் நிகழ்வின் ஓர் அங்கமாக இருக்கவும், புதிய சாதனங்கள் செயற்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அடிப்படையில் என்ன வழங்குகின்றன என்பதைப் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ளவும் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ தெரிவிக்கின்றார்.

மேலதிக விபரங்களுக்கு உத்தியோகபூர்வ Huawei பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருக்க Huawei தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *